Thursday, September 23, 2010

பயிற்சி 24 - உயர்நிலை 1 (மரபுத்தொடர்கள்)

மரபுத்தொடர்கள்
விளக்கம்

1
ஆசை வார்த்தை

ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படுதல்
2
ஆறவமர
நிதானமாகச் செயல்படுதல்
3
ஏட்டிக்குப் போட்டி
எதிர்கருத்துகளைக் கூறுதல்
4
ஒரு கை பார்த்தல்
சவால் விடுதல்
5
ஒளிவு மறைவு
எண்ணத்தை மறைத்தல்
6
ஓட்டைக்கை
பெருஞ்செலவாளி - அதிகமாகச் செலவு செய்பவன்
7
ஓட்டைவாயன்
இரகசியத்தைக் காப்பாற்ற முடியாதவன்
8
கட்டுக் கதை
பொய்க் கதை சொல்லுதல்
9
கம்பி நீட்டுதல்
தப்பித்துச்செல்லுதல்
10
கண் மூடித்தனம்
சிந்திக்காமல் ஒரு செயலில் ஈடுபடுதல் - அறியாமையில் இருத்தல்
11
கரைத்துக் குடித்தல்
ஒன்றைப் பற்றி நன்கு அறிந்திருத்தல்
12
காலில் விழுதல்
மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுதல் -பெரியோர்களின் வாழ்த்துகளைப் பெறுவதில் ஈடுபடுதல்
13
குரங்குப் பிடி
பிடிவாதமாக இருத்தல்
14
கை கழுவுதல்
வெறுத்து ஒதுக்கி வைத்தல் - விட்டுவிடுதல்
15
கையுங்களவுமாக
தவறு செய்யும்போது பிடிபடுதல்
16
சிட்டாய்ப் பறத்தல்
மிகவும் வேகமாகச் சிட்டைப்போல் செல்லுதல்
17
செவி சாய்த்தல்
கூர்மையாகக் கேட்டல்
18
தட்டிக் கேட்டல்
தவறு செய்யும்போது கண்டித்தல்
19
தட்டிக் கொடுத்தல்
உற்சாகப்படுத்துதல் - தளர்வில்லாமல் இருக்கச் செய்தல்
20
தட்டிப் பறித்தல்
உரிமையைப் பறித்துக்கொள்ளுதல்






21
நட்டாற்றில் விடுதல்
நம்பிக்கைக்குத் தீங்கு செய்தல் - முழுமையான உதவி செய்யாமல் இருத்தல்
22
பகல் கனவு
கற்பனையில் மிதத்தல் – செயல் வெற்றி பெறாமல் இருத்தல்
23
பல்லைக் காட்டுதல்
காரியத்தைச் சாதிப்பதற்குச் சிரித்தல்
24
புத்தகப் புழு
புத்தகத்தை மட்டும் படித்துக்கொண்டிருத்தல் – உலகத்தைத் தெரியாமல் இருத்தல்
25
பூசி மெழுகுதல்
குறையை மறைத்தல்
26
வாய்க்கொழுப்பு
தேவையில்லாததைப் பேசுதல் -திமிராகப் பேசுதல்
27
வாலாட்டுதல்
சேட்டை செய்தல் –
குறும்புத் தனம் செய்தல்
28
வெளுத்து வாங்குதல்
நன்றாகச் செய்தல் – ஒரு செயலை மிகச் சிறப்பாகச் செய்து முடித்தல்





1 இணைமொழிகள்
உயர்நிலை

இணைமொழிகள்
விளக்கம்

1
அருமை பெருமை
உயர்வு - சிறப்புத் தன்மை
2
அக்கம் பக்கம்
அண்மையில் -அருகில் - பக்கத்தில்
3
அல்லும் பகலும்
இரவும் பகலும் - ஓய்வில்லாமல் உழைத்தல்
4
அன்றும் இன்றும்
கால முழுவதும் - தொடர்ச்சியாக - காலங்காலமாக
5
ஆடல் பாடல்
நடனமும் பாடலும் - ஆட்டம் பாட்டம்
6
ஆடை அணி
ஆடையும் நகையும்
7
இன்ப துன்பம்
சந்தோசமும் வேதனையும்
8
ஈவிரக்கம்
அருள் மனம்
9
உயர்வு தாழ்வு
உயர்ந்த நிலையும் தாழ்ந்த நிலையும்
10
ஓட்டமும் நடையும்
வேக வேகமாக
11
கண்ணீரும் கம்பலையும்
அழுகையும் கவலையும்



12
கண்ணும் கருத்தும்
மிகவும் அக்கறை - மிகவும் கவனம்
13
குறை நிறை
குறைந்த - நிறைந்த பண்புகள்
14
நாளும் கிழமையும்
நல்ல நாட்கள்
15
பழக்க வழக்கம்
பண்புகள்
16
பேரும் புகழும்
செல்வாக்கு நிலை


No comments:

Post a Comment